Pages

February 25, 2016

வெள்ளிப்பனி சொரியுது இங்கே

இலவு தெறிச்சு வெடிச்சது போல்
ஈரப் பனி பறக்குது இங்கு
சாளரம் எல்லாம் சாத்திவிட்டு
சாய்ந்திருந்து ரசிக்கையிலே
இன்னல் உற்ற மனசினிலே
இறுகிக் கிடக்கும் சுமைகளெல்லாம்
பட்டுப் பட்டாம் பூச்சிபோல
பறந்தடிச்சு ஓடுது எங்கோ

கிட்டப் போய் தொட்டுப் பாக்க
கெலி கொள்ளும் மனசை
கிலி கொள்ள வைக்குதிங்கு
கிளர்ந்தெளும்பும் குளிரின் குணம்
கொள்ளை அழகுதான் பனி
கொட்டிக் கிடக்கும் அழகு
கொடுமையாய் இருக்குது
கொடுங் குளிரை நினைக்கையிலே

வந்து இங்கு வாழத் தொடங்கி
வருசம் இருபத்தி அஞ்சு
வரலாற்றில் பதிந்த போதும்
இந்த மண்ணில் ஒட்டாப் பனிபோல
இங்கு எங்கள் வாழ்வும் நகருதென்றும்
பிள்ளை பருவ வாழ்வின் சுவட்டை
பிரித்துப் பிரித்து மேய்ந்து பார்த்து
பின்னை காலமும் நகரும் இங்கே...

#ஈழத்துப்பித்தன்
25.02.2016

(எங்கள் வீட்டுச்சாளரமூடாய் தினமும் காணும் காட்சியின் இன்றைய தோற்றமும் சிலமாதங்களுக்கு முன்னைய தோற்றமும், இன்று வெள்ளிப்பனி சொரிகின்றது)

5 comments:

Nagendra Bharathi said...

அருமை

நிஷா said...

அசத்தல்பா!கொட்டும் பனியில் கொட்டிய வரிகளாய் வந்து விழுந்த வார்த்தைகள் அழகோ அழகு,ஈழத்தமிழில் இயல்பான் உங்கள் தமிழ் என்றும் தொடரட்டும்.

Inuvaijurmayuran said...

நன்றி நட்பே!

Inuvaijurmayuran said...

மிக்க நன்றி நிஷாக்கா.

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை மயூரன்

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.