December 29, 2020
இந்தியா நோக்கி முதலாவது உலாத்தல் பகுதி 2
இந்தியா நோக்கி முதலாவது உலாத்தல் 1
முதலாவது இந்தியப் பயணத்துக்கு... 1
டிசம்பர் முதலாந் திகதி 2015 அதிகாலை 11.00 மணிக்கு என் கைத்தொலைபேசி அலறியது. என்ன 11.00 மணிஅதிகாலையா் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. ம் அந்த நேரம் நான் இரவு வேலை செய்துகொண்டிருந்தேன். அதிகாலை 5.00 மணிக்குதான் வேலை முடியும். வந்து ஆறு மணிக்கு நித்திரைக்கு போனால்11.00 மணி என்பது அதிகாலைதானே? ம் தொலைபேசியை தூக்கிப் பர்த்தேன் என் வேலையிடத்திலிருந்து, தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதற்கிடையில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள்.
ஏற்கனவே ஒருவர் மருத்துவ விடுப்பில் நின்றதால் 14 நாட்கள் விடுமுறை இல்லாமல் தொடர் வேலை. இன்றுதான் 14 நாட்களுக்கு பின் விடுமுறைநாளாக அமைந்தது. அந்த விடுமுறைக்கும் ஆப்போ என்றமனச்சோர்வவோடே இணைப்பை ஏற்படுத்தினேன். வழமையான குசல விசாரிப்புக்களுக்குப் பின் பொறுப்பாளர்விடயத்துக்குள் நுழைந்தார். உனக்கு 5வாரமேலதிக விடுமுறை உள்ளது. அதனை ஜனவரிக்குள் எடுத்து முடிக்கவேண்டும். அதனை நீ விரும்பினால் இன்றிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம் என்று. நான் முன்னர் வேலை செய்யஇடத்தில் மூன்று பேர் வேலை. எப்போதும் இருவர் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். நான்கு நாள் வேலைஇரண்டுநாள் விடுமுறை என அட்டவணை சுழலும். அதனால் நாம் எமக்கு நீண்ட விடுமுறைகள் தேவைப்படின்எங்கள் பொதுவிடுமுறையில் கை வைக்காமல் ஒவ்வொருவரின் அட்டவணையை அடுத்தவர் பொறுப்பேற்றுசெய்வோம். அதனால் எனக்கு ஆண்டுதோறும் நீண்ட நாள் விடுமுறை அடிக்கடி வரும். அந்த விடுமுறைகளுக்குஉலாத்திக் கொள்வேன். அதனால் பொதுவிடுமுறை அப்படியே சேர்ந்திருந்தது.
சரி அதற்காக இன்றிலிருந்தெல்லாம் விடுமுறை எடுக்கேலாது இரண்டு வாரத்தில் எடுக்கறேன் என முடிவைசொல்லிவிட்டு இணையத்தில் விண்ணூர்திக்கான பயணச் சீட்டுக்களை பார்க்கத் தொடங்கினேன். தமிழகம்போவதற்காக திட்டமிட்டேன். அந்த வேளையில் அம்மாவும் சகோதரியும் தமிழகம் சென்றிருந்தனர். அதே நேரம்2016 நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கும் போய் வரலாம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும்திட்டத்தோடு. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இந்தியாவுக்கான உள் நுழைவு விசா எடுக்க வேண்டும். சுவிசில்விசாக்கு கொடுத்தால் இரண்டு வாரத்துக்கு மேலாகும் பின்னர் நத்தார் காலம் நெருங்கிவிடும். பயணச்சீட்டுக்கள்அதிகவிலையாயிருக்கும் அத்நோடு கிடைப்பதும் அரிது.
சரி இலங்கை போய் அங்கே விசா எடுத்து இந்தியா போவதென திட்டமிடப்பட்டது. உடனடியாக இலங்கைக்குவிமானச் சீட்டைப் பார்த்தேன் 14ந் திகதி புறப்படும் விமானத்துக்கு 850 சுவிஸ் பிராங்குக்கு விமானச் சீட்டுஇருந்தது. உடனடியாக வங்கி மூலம் பணத்தைச் செலுத்தி உறுதிப்படுத்திவிட்டேன். பயணம் உறுதி, மற்றும்குறுகிய நாள் என்பதால் காப்புறுதி கூடச் செய்யவில்லை. எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு பேஸ்புக்கில்நுழைந்தேன். பேரதிர்ச்சியான செய்தி காத்துக்கிடந்தது....
December 6, 2020
கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்
கச்சல் கோப்பியும் காச்சின கசிப்பும்
May 20, 2018
உலாத்தலும் உறவுகளும்
********************
ரூபன் 2002களிலிருந்து அறிந்த நண்பர். நான் "குருத்து" இதழின் ஆசிரியராக இருந்த சமகாலத்தில் ரூபன் நோர்வேயிலிருந்து "இளம்பரிதி" என்ற சஞ்சிகையை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அன்றைய காலத்தில் கனடாவிலிருந்து வந்து அனைத்துலக இளையதலைமுறையினரை ஒருங்கிணைந்த பார்த்தீபனூடாக ரூபனும் இளம்பரிதி இதழும் அறிமுகமாகின.
எழுத்துத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சம வயதினராய் அறிமுகமான ரூபனை 2003 யூலை மாதம் வன்னியிலுள்ள பாண்டியன் எனப்படும் தமிழீழ அரசின் விருந்தினர் விடுதியில் சந்திக்க முடிந்தது ஒரு சுவையான அனுபவம்.
ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியிருந்தாலும் ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியாது. பாண்டியன் விருந்தினர் விடுதிக்கு சென்று நுழைந்த என்னை வாசல் வந்து வாங்கோ மயூரன் என்று வரவேற்றுக் கொண்டவர் ரூபன் பின்னே நோர்வேயை சேர்ந்த குயின்ரன் அண்ணா. ஆச்சரியமாய் இருந்தது நான் கேட்பதற்குள் ரூபனே முந்திக்கொண்டு இன்று நீங்கள் வருவதாக முன்னரே அறிவித்தல் வந்தது என்று என் ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக தமிழீழ அரசின் விருந்தினர்களாக அங்கே ஒன்றாகத் தங்கியிருந்தோம் மூன்று உணவுவேளைகள் மற்றும் இரவு வேளைகளில் அதிகம் பேச முடிந்தது. சேர்ந்திருந்து போராளிகளிடம் போரியல் அனுபவங்களை கேட்டறிந்தது தமிழீழத் திரைப்படப்பிரிவினால் ஈழத்தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டு திரைப்படங்களை சேர்ந்து பார்த்ததென நிறைந்த பொழுதுகளாய் ரூபனோடு கழிந்தது.
பின்னர் பேஸ்புக் மீண்டும் ரூபனுடனான நட்பைப் புதுப்பித்தது. இம்முறை திடீர் குறுகிய கால நோர்வே பயணம் ரூபனை சந்திக்கும் காலத்தை ஏற்படுத்தித்தருமென நான் நினைக்கவில்லை. ஆனாலும் ரூபனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் ரூபனோடு சில மணித்துளிகள் அளவளாவ முடிந்தது மகிழ்வு. நிறைய விடயங்கள் உரையாட முடிந்தது. விரைவில் ரூபனின் கவிதைத் தொகுப்பொன்றும் நூல் உருவில் வரவுள்ளதாக அறிந்தேன். வாழ்த்துகள் ரூபன்.
#உலாத்தலும்_உறவுகளும்
May 14, 2018
உலாத்தலும்_உறவுகளும்
************************
பேஸ்புக்கூடாய் அறிமுகமாகி எங்களோடு சரிக்கு சரி பம்பலடிக்கும் அன்பு உள்ளம். எங்களோட பம்பலடிச்சு திரியிறதாலை ஆளும் எங்களை மாதிரி ஒராள் எண்டு நினைச்சா அது தவறு ஆள் ஆளுமையான மனிதன். அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றது.
பரணி அண்ணாவின் பிறந்தநாள் அன்று அவரது நட்பு வட்டத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட அவரது இசைப்பேழை வெளியீடு மற்றும் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு அவருக்கு தெரியாமல் சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து நான் ஒஸ்லோ பயணப்பட முடிவெடுத்தபோது குகன் அண்ணாதான் நினைவுக்கு வந்தார். அவரை தொடர்புகொண்டு எனது வரவு பற்றி சொன்னபோது தானே விமான நிலையம் வந்து அழைத்துச் செல்வதாய் உறுதியளித்தார்.
அதேபோல் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று இன்முகத்தோடு கவிதாக்காவின் கைவண்ணத்தில் அருமையான மதிய உணவு வடை பாயாசத்தோடு தந்து திக்குமுக்காட வைத்து விட்டார். அவரது வீட்டில் தங்குவதற்கான அத்தனை ஒழுங்குகளையும் அவர் செய்துதந்தபோதும் பரணி அண்ணாவின் உரிமைப்போரினால் அது சாத்தியப்படாது போய்விட்டது.
ஆளுமைமிகு வானொலி ஒலிபரப்பாளரான குகன் அண்ணா இருபது ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முரசம் வானொலியின் ஒலிபரப்பாளராக சேவை புரிந்துவருகின்றார் வானொலியின் இன்றைய சந்திப்பு நிகழ்வில் என்னையும் அழைத்துக் கௌரவப்படுத்தியிருந்தார்.
ஒரு வானொலி அறிவிப்பாளரான எனக்கு ஒலிபரப்புத்துறை சார்ந்து அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் கிடைத்தன. பேஸ்புக் தந்த பெயர் சொல்லும் சில நட்புக்களில் அவரும் ஒருவரானது மனநிறைவைத் தருகின்றது.
#உலாத்தலும்_உறவுகளும்
April 26, 2018
சட்டி சோறு
************
மலேசியாவின் கோலாலம்பூர் நகரின் மையப்பகுதி தமிழர்களின் ஆளுகைக்குள் கட்டுண்டு கிடக்கின்றது.
எப்படி பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் வடபரிஸ் தொடருந்து நிலைய வாசலில் வெளியேறியதும் சோறு வாசம் கமகமக்குமோ அப்படித்தான் கோலாலம்பூர் நகரின் பிரதான தொடருந்து நிலைய வாசலை விட்டு வெளியேற தமிழ்ப்பெயர்ப்பலகைகளும் சோறு வாசமும் கண் சிமிட்டும்.
மலேசியாவில் எங்கும் கிடைக்காத சட்டி சோறு எனப்படும் சிறப்பு உணவு இந்த ஏரியாவில்தான் கிடைக்கும். அதுவும் ஒரே ஒரு கடையில்.
சுபிரமணிய பிரபா சட்டி சோறு சாப்பிடுவம் என்றபோது அந்த சட்டி சோறு என்ற சொல்லே ஒரு ஈர்ப்பையும் சாப்பிட வேணும் என்ற விருப்பையும் ஏற்படுத்தியது.
கடையை தேடிப்பிடித்து போனபோது சோத்துப்பிரியர்களால் கடை நிரம்பிக் கிடந்தது. ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்று கடை உரிமையாளர் சொன்னபோது சிறுகுடலை பெருங்குடல் தின்று தீர்த்துவிடுமளவு பசியின் வேகம் அதிகரித்துப்போயிருந்தது.
நண்டு, கோழி, றால், ஆடு, மீன் என சட்டிச்சோறு பல வித சுவையோடு உடனுக்குடன் சமைக்கப்பட்டு அதே மண் சட்டியோடு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்த
கறிகளை உடனுக்குடன் சமைத்து அதற்குள் அரிசியையும் சேர்த்து அவியவிட சுவையான சட்டி சோறு யாழ்ப்பாண வாசத்தோடும் சுவையோடும் தயாராகியிருக்கும். அப்பிடி ஒரு சுவை.
குடிப்பதற்கு ஆவரம்பூ மற்றும் நற்சீரகம் அவித்த தண்ணீரும் தரப்பட்டது.
நாக்கை விட்டகலாத சுவை இன்னொரு முறை வாய்ப்பிருந்தால் சுவைக்க வேணும்.
உணவகத்தை அறிமுகப்டுத்தி சட்டி சோறு போட்ட சுபிக்கு நன்றி.









