Pages

January 12, 2023

உலாத்தலும் உறவுகளும்

இது எனக்கு மூன்றாவது நோர்வே பயணம்இந்தப் பயணத்தை நிறைவாக்கிய பெரும் பங்கு தம்பி சயனுக்குஉண்டு.


சயன் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி முதன் முறையாக 2019 இல் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் குடும்பமாகசந்தித்த உறவு


"மயூரன் அண்ணாஎன்று அழைக்கும் போதே அவனது அன்பை உணர முடியும்இன்னொரு தடவை அழைக்கமாட்டானா என மனம் ஆசைப்படும்


இம் முறை பயணத்தில் அவனே என்னை விமான நிலையத்தில் வந்து அழைத்துச் செல்வதாக திட்டமிடப்பட்டதுநான் சென்ற நாளில் ஏற்பட்ட அதீத பனிப்பொழிவு வாகன போக்கு வரத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியதுசயனின் வாகனமும் பனியில் சிக்குண்டு வெளி வர பெரும் பொழுது தேவைப்பட்டதுநான் தொடரியில் ஒஸ்லோவருவதாக கூறினேன்அதற்கிடையில் பரணி அண்ணா என்னை விமான நிலையத்தில் இருந்து  என்னைஅழைத்துச் சென்றுவிட்டார்.


சயன் அங்கு வந்து என்னை பொறுப்பேற்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒஸ்லோ முருகனை தரிசிக்கஅழைத்துச் சென்று அங்கு ஆலய நிர்வாகத்தால் என்னை மதிப்பளிக்க வைத்து மான்புற வைத்தான்


தங்கள் வீட்டிலையே நான் தங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து தந்தான்சயனின் துணைவியார்சுவையான உணவுகளை தந்து சயனைப்போலவே ஒரு சொந்த அண்ணனை கவனிப்பது போல்கவனித்துக்கொண்டார்பிள்ளைகளும் இயல்பாக பழகி மகிழ்ந்தார்கள்


நான் சந்திக்க விரும்பிய என்னை சந்திக்க விரும்பிய உறவுகளை எல்லாம் நேரம் ஒழுங்குபடுத்தி சந்திக்கவைத்த பெரும்பணி சயனையே சேரும்கொட்டும் பனிக்கு மத்தியிலும் வழுக்கும் வீதிகளிலெல்லாம் பக்குவமாகவாகனத்தை ஓட்டி அழைத்துச் சென்றான்சயன் பக்குவமா அழைத்துச் சென்றும் நானாக ஒரு தடவை வழுக்கிவிழுந்தது வேறு கதை.


எனது இந்த பயணத்தை சயன் இன்றி என்னால் இலகுவாக்கியிருக்க முடியாது என்பதே உண்மை


என்றோ ஒருநாள் நான் எனக்கு பிடித்த நோர்வேஜிய இனிப்புப் பண்டங்கள் பற்றி பதிவிட்டதை நினைவில்வைத்து அவற்றையும் வாங்கித் தந்து வழியனுப்பி வைத்தான்.


இத்தகைய உறவுகள் அமைந்தது இறையருள் அ்ன்றி வேறில்லை.


தொடரட்டும் இதுபோன்ற நல்லோர் நட்பு.

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.