மே 18
ஒருவன் அழைத்தான் தலைவருக்கு வணக்கம் செலுத்துவோம் வா என்றுஇன்னொருவன் அழைத்தான் தேசத்தின் புதல்வியின் தலைமையில் ஒருங்கிணைவோம் வா என்று நன்றாய் அறிந்தவன் அழைத்தான் தலைவர் இல்லைத்தான் ஆனால் இப்போ சொல்ல முடியாது எங்கள் தலைமையில் வா என்று ஒவ்வொருவரின் இலக்குகளும் என்ன என்றேன் அவர்கள் சொன்னதை வைத்து ஒன்றைப் புரிந்தேன் ஒருவரை ஒருவர் காலை வாருவதே அவர்கள் இலக்கு என்று வியாபாரிகள் உங்களுக்குள் நிலவும் கடும் போட்டிக்குள் எங்களை இழுத்துக் குளிர் காயாதீர்கள் உங்களுக்குள் ஒரு முடிவை எடுத்து விட்டு எங்களை ஒருங்கிணைக்க வாருங்கள் என்றுவிட்டு என்றும் போல் எங்கள் வீட்டு மாடத்தில் தென்திசை நோக்கி ஒற்றைத் தீபத்தை ஒளிரச் செய்தேன்
No comments:
Post a Comment
தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.