Pages

June 20, 2013

துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு


நீண்ட நாட்களின் பின்
நிலவு பூத்தது போல் இவ் இரவு
சொல்ல முடியாத மகிழ்ச்சி வெள்ளம்
சோகம் எல்லாம் மறைத்து நிற்க
மத்தாப்பு பூத்து
மனம் முழுக்க சிரித்து நிற்க
எத்தனையோ நாட்களாய்
ஏக்கத்தோடு உறங்காத கண்கள்
சேதி அறிந்த கணம் முதல்
சிலிர்த்து சொரிந்த கண்ணீரில்
உப்பு உறைக்கவில்லை
உதிரத்தில் கலந்த தமிழ்தான் இனித்தது

துன்பத்தை தந்தவனுக்கே
திருப்பிக்கொடு - என்று
சொன்னவன் வழி வந்த பிஞ்சுகள்
ஆடுகளத்தை அசர வைத்து
போர்க்களமாடி உலகமுன்றலில் - எங்கள்
கதை மீண்டும் கதையாகாமல்
கவனப்படுத்திய காட்சி கண்டு
உள்ளம் உவகை கொண்டு சிரிக்கின்றது
உளமார வாழ்த்துகின்றேன் வீரரே!!!

1 comment:

Anonymous said...

இது பெசுவது தப்பு இல்லை.ஆரோக்கியமாக சிந்தித்து செயலாற்றுக. உணர்ச்சிவசப்பட்டு பிரயோசனம் இல்லை.
பிரித்தானிய அரசாங்கத்திடம் கெட்ட பெயர் வாங்க எடுத்த முடிவு இது.இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் வீழ்ந்த இபடியான தமிழர்களின் ஆரோக்கியமற போராட்டங்களே தமிழனை இந்த நிலைக்குள் தள்ளியிருக்கின்றன...இவையெல்லாம் சிங்களவனை பலமடையசெய்யும் செயற்பாடுகள்.முட்டாள் முடிவுகளை எடுத்த ஈழத்த்ல் வாழும் மக்களை கடினவாழ்க்கைக்கு உட்படுத்தாதீர்கள்.சந்தியில் நின்றவர்கள் ஊர்ச்சண்டை பிடித்தவர்கள் கையில் இப்படியான செயற்பாடுகள் நிற்பதே இதற்க்கு காரணம்.கேவலம் சிங்களவன் கைகொட்டி சிரிக்குமளவிற்கு உங்கள் முட்டாள்முடிவுகள் இருப்பது தமிழனின் எதிர்காலம் கேள்விகுறி
அமைப்புகளுக்கிடையில் பொறாமை, தலைமைபோட்டி, உள்வீட்டு சண்டை, அறிவில்லாத தலைமை, கண்டவனும் வீடியோல பேசிவிடும் உணர்வு மயிர் பேச்சுகள், எல்லாம் நிறுத்தினால் சிங்களவன் ஏன் 10 தமிழருக்கு அடிக்கபோறான்.எல்லாரும் ஒற்றுமையா போங்கோ ஈழம் கிட்ட தான் இருக்கு

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.