Pages

January 28, 2016

நிழல்களில் வாழும் நினைவுகள் 1

நிழல்களில் வாழும் நினைவுகள் 1
*************************************
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்று கிளுவை வேலி.

கிளுவை பல நினைவுகளை தந்து போகும். சிறார்களாக நாம் இருந்தகாலங்களில் பல் விழும்போது அந்த இடைவெளிக்கு கிளுவங் கதியால் போடுவமோ என்ற சொல்லாடலை கேட்க்காமல் எவரும் அப்பருவத்தை கடந்திருக்கும் முடியாது.

நெருப்புப்பெட்டிக்குள் பொன்வண்டு வளர்த்த பருவத்தில் பொன்வண்டுக்கான உணவாக இக் கிளுவங்குருத்துக்களே இருந்துள்ளன.

யாழ்ப்பாண மக்களின் வாழ்வோடு ஒன்றிய கிளுவையின் முள் விசத்தன்மை கொண்டது. இதன் முள் குத்தினால் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிளுவங் கதியால் வெட்டும் விற்பனையும் சூடு பிடிக்கும். இக்காலத்தில் எங்கையன் கதியால் கிடந்தா சொல்லுங்கோவன் என்ற சொல்லாடலை அதிகமாய்க் கேட்க முடியும்.

யாழின் அடையாளங்களில் ஒன்றான கிளுவை வேலி இப்போ வழக்கொழிந்து வருபவையின் பட்டியலில் இணைந்துள்ளது.

26.01.2016

2 comments:

நிஷா said...

இளமைக்கால நினைவுகளோடு கலந்து வரும் பதிவுகளாய் கிளுவை மரம் குறித்த பகிர்வுக்காகபாராட்டுகள் மயூரன்.தொடர்ந்து எழுதுங்கள்.

Inuvaijurmayuran said...

மிக்க நன்றி சகோதரி. உங்களின் உற்சாகமே என் மீள்வரவுக்கு வித்திட்டது. மிக்க நன்றி.

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.