Pages

April 19, 2016

ஒருநாள் யுத்த நிறுத்தமாம்...

அருவி ஊற்றென
அழுது வடித்தவள்
அடங்கிக் கிடக்கிறாள்
பொருமி வெடித்திட
புழுங்கித் தவிக்கிறாள்
தழுவித் தகித்தவள்
தயங்கி நிற்கிறாள்

ஒற்றைநாள்
ஒருதலைப்பட்ச
யுத்த நிறுத்தமாம்
சத்தம்  இன்றி
சலனம் இன்றி
இப்போதான்
சற்று சிரித்துச்
சிவக்கிறாள்

சிவக்கிறாள்
சிரிக்கிறாள் இவளென
சிந்தை தெளிந்து
சிரிக்க முடியவில்லை
ஒருதலைப்பட்ச
ஒருநாள்
யுத்த நிறுத்தம் தானாம்

யுத்தம் எப்பவும்
சத்தத்தோடு வெடிக்கலாம்
பாதிப்பு முன்னதை விட
பலமாயும் இருக்கலாம்
யுத்த நிறுத்தம்
காலவரையற்று
நீடிக்கவும் படலாம்
எதற்கும் தயாராய்த்தான்
இருப்பை நிலை நிறுத்த
எடுத்தடி வைக்கிறேன்...

#ஈழத்துப்பித்தன்
19.04.2016

2 comments:

தனிமரம் said...

இன்னும் முடியாத யுத்தம் மக்கள் பாவம்! அருமையான கவிதை.

Inuvaijurmayuran said...

தனிமரம் தங்கள் வரவுக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.