Pages

January 4, 2011

வாழும் போதே கௌரவிப்போம்.

நூலகவியலாளர் என்.செல்வராஜா பல தடவை என்னோடு உரையாடிய போதிலும் எமது குருத்து இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதிலும் மறக்காமல் குறிப்பிடும் ஒரு விடயம் வாழும் போதே கௌரவிப்போம். அது தான் இன்றைய என் பதிவின் தலைப்பும் உள்ளடக்கமும்.

மகாகவி பாரதியின் இறப்பின்போது வெறும் பதின்நான்கு பேர்தான் அவனது இறுதி ஊர்வலத்தில். ஆனால் இன்று மகாகவி இன்று வாழ்ந்திருந்தானானால் அவன் காலடியில் இந்த வையகம்.

வாழும் போது ஒருவன் செய்த இழி செயலுக்காய் தூற்றுகிறோமோ அதைவிட ஒருவன் செய்யும் நல்ல விடயங்களை சீர் தூக்கிப் பார்த்து அவனுக்குரிய கௌரவத்தை அவன் வாழும் காலத்திலேயே அவனுக்கு கொடுக்க வேண்டும். ஏன்ற நூலகவியலாளரின் கருத்தோடு என்றும் எனக்கு ஒத்த கருத்துண்டு.

அதனால்தான் எத்தனையோ பாரிய வேலைப்; பழுக்களுக்கு மத்தியில் இந்தப் பதிவை எழுதுகிறேன். $

அண்மையில் சுவிற்சர்லாந்திலிருந்து வெளிவந்திருக்கக் கூடிய ஓர் இசைப்பேழை சூரியோதயம். இது ஒரு ஈழத்தமிழ் மற்றும் தமிழக கலைஞர்களின் கூட்டு வெளியீடு.

இதில் வெயிவந்திருக்கும் பாடல்களை ஜோதி அவர்கள் எழுதி தமிழக பின்னணிப்பாடகர்கள் திரு. ஏச். ஆனந்தநாராயணன், திருமதி ராதா பத்ரி ஆகியோர் பாடியுள்ளார்கள். வேங்கடசுப்பிரமணியன் என்பவர் இசையமைத்துள்ளார். சுவிஸ் அன்னை வெளியீட்டகத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த இசைப்பேழையில் வெளிவந்த பாடல்களை யாத்த கவிஞர்  ஏற்கனவே இரண்டு இசைபேழைகளை வெளியிட்டிருக்கின்றார். அவை இரண்;டும் பக்திரசம் சொட்டும்  பாடல்களை உள்ளடக்கியவையாக இருந்திருக்கின்றன. இந்த இசைப்பேழையோ அவற்றிலிருந்து சற்று வேறுபட்டு தமிழை துதிப்பனவாக தமிழுக்காய் தம் உயிர் தந்தவர்களை நினைப்பவையாக அமைந்துள்ளன.

குறிப்பாக இந்த இசைப் பேழையின் அனைத்துப் பாடல்களும் அனைவரையும் ஈர்க்கும்வகையில் அமைந்திருந்தாலும் எனது கண்ணோட்டத்தில் சில பாடல்களை கோடிட்டுக்காட்ட முடியும்.
குறிப்பாக இரண்டாவது பாடலான வந்தனங்கள் சொல்லி எனத் தொடங்கும் பாடல் என் மனதில் மட்டும் அல்ல பலரது மனங்களிலும் நீண்ட காலமாக இருந்து வந்த ஓர் இடைவெளிளை நிரப்பியிருக்கின்றது. அதாவது எம்மவர்களின் கலை நிகழ்வுகள் பலவற்றிலும் சம்பந்தமில்லாத பாடல்களே வரவேற்புப்பாடலாக ஒலிபரப்பாகியிருக்கின்றன. அந்தக் குறையை தீர்க்கும் முகமாக தேன்தமிழ் வரிகளில் இனிய தமிழிசையூட்டலுடன் அந்தப்பாடல் உருவாகியிருக்கின்றது. இனி நடைபெறும் தமிழர் நிகழ்வுகளில் அந்தப் பாடலே வரவேற்புப்பாடலாகவோ அல்லது வரவேற்பு நடத்துக்குரிய பாடலாகவோ இருக்கக்கூடியதென முன்மொழிகிறேன்.

அதே போல் ஆறாவது பாடல் நான் ஒரு பொம்மை என்கின்ற பாடல் மெல்லிய இளையோடிய சோகத்தோடு ஈழத்தமிழரின் வாழ்வியலை ஜந்து நிமிடத்துக்குள் அளந்திருக்கிறார். இந்தப் பாடல் குறளுக்கு ஒப்பானது.
புத்தாவது பாடல் இது வடிவேலனை காணாமல் தேடும் பக்தர்களின் குரலாய்  ஈழத்தமிழரின் இன்றைய எதிர்பார்ப்பை மனோநிலையை பிரதி பலிக்கின்ற பாடல்.

பதினொராவது மற்றும் பதின்நான்காவது பாடல் எங்களின் குழந்தைகளுக்கான பாடல் இலகு தமிழில் இனிய இசையில் குழந்தைகளுக்கு ஏற்றால்போல் அமைக்கப்ட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் கவரவேண்டும் என்ற கவிஞரின் எண்ணம் நிறைவேறியுள்ளது.

கவிஞரின் பிறந்த மண்ணின் இயல்பான சிறப்பு அவரின் கவிவரிகளில் இழையோடியுள்ளது. ஆம் செந்தமிழ் செழித்தோங்கும் இணுவை மண்ணின் உலகம் போற்றும் உத்தமக் கவிஞன் வித்துவான் வீரமணி ஐயரின் அயல்வீட்டவர் என்பதை இவரின் வரிகள் உணர்த்திநிற்கின்றன.

8 comments:

Anonymous said...

arumai thodaraddum umathu akkangal

valthkkal Mayuran

panchalingam thavanesan said...

arumai thodaraddum umathu akkangal

valthkkal Mayuran

ம.தி.சுதா said...

தமிழ் சாகாவரம் பெற்றது... யார் செத்தாலென்ன அது வாழும், வாழ வைக்கப்படுமல்லவா....

Anonymous said...

நான் அறிந்து வேதனைப்படும் விடயம்
எத்தனையோ கலைஞ்ஞர்கள் , புத்தியீவிகள் இன்னும் இலைமறை காயாக மனிதத்தின் பாராமுகத்துடன்
வாழ்ந்து மடிகின்றார்கள் .அவர்களுக்கே
அவர்கள் திறனை காட்ட யாருமில்லை
"வாழும் போதே கௌரவிப்போம் "
...நல்ல விடயம் வாழ்த்துக்கள் மயூரன்

Kannady Mano

mainthan said...

உங்கள் ஆக்கத்திற்கும், இணைப்பிற்கும் முதலில் நன்றிகள் பல...
"வாழும்போதே கெளரவிப்போம்" என்ற நல்ல தலைப்பில் ஒரு ஆக்கத்தை அல்லது வேண்டுகோளாக இணைத்துள்ளீர்கள்.

ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போது மனிதனாக மதிக்கத்தெரியாத நாங்கள் கலைஞனை அதுவும் உயிரோடு இருக்கும்போதே மதிப்போமா என்பது கேள்விக்குறி.
சும்மா மேடைப்பேச்சுக்கு உதாரனத்திற்காக பல கலைஞனை நினைவுகூறுகிறமே தவிர அக்கறையிலை அல்ல என்பது எனது கருத்து.

அம்பாளடியாள் said...

"காகித இதழ்கள் கனதி அற்ரவைதான்
அங்கெ எழுதப்பட்ட விடயங்கள் வாசித்து உணராதவரை"!....
சில கலைஞ்ஞர்களின் நிலையும் அப்படித்தான். இனங்கண்டு கௌரவிக்காதவரை இவர்கள் திறமை எல்லாம்
இவர்கள் கல்லறை சென்றபின்தான் கௌரவிக்கப்படுகின்றது.
அதிலும் வாழும்போதே கௌரவித்தல்தானே அந்தக் கலைஞ்ஞனுக்கு
கிடைக்கும் உண்மையான கௌரவம்.உங்களது இந்த முயற்சியும்
ஆக்கமும் என் நெஞ்சை நெகிழ வைக்கின்றது.வாழ்த்துக்கள் மயூரன்!!!.....

இணுவையூர் மயூரன் said...

அனைவருக்கும் நன்றிகள்.

ப. பிரதீபன் said...

பாடலை எங்கேனும் தரவிறக்கமுடியுமா? அல்லது இணையத்தில் எங்கும் விற்பனைக்குக் கிடைக்குமா? முடிந்தால் பின்னூட்டமிடவும்.

பின்வரும் தொடுப்பிலுள்ள பாடல் அரங்கத்து இரைச்சல்களுடனேயே ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலித்தரம் அவ்வளவு நன்றாக இல்லை.

http://youtu.be/W7deDHHwX8U

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.