Pages

February 4, 2016

(சு)தந்திர நாள்

(சு)தந்திரநாள்
*****************
இன்று சுதந்திர நாளாம்
சொல்லவும் கேட்கவும்
எவ்வளவு இனிக்கிறது

ஒரே நாடு
ஒரே தேசம்
கேட்க கேட்க
காதினிக்கிறது.

இந்தச் சுதந்திர
ஒரே தேசத்தின்
ஒரு தாய் மக்கள்தானாம்
நாம் எல்லாம்
எவ்வளவு இதமாயிருக்கிறது

என் தாத்தன் முதுகில்
சிங்களச் சிறி
சீராய் பதிந்ததும்
என் தந்தையின் கல்வி
தரப்படுத்தலுக்குள்
தாழ்ந்து போனதும்
நான்
புலம் பெயர்ந்து
புலன் இழந்ததும்
என் பிள்ளை
இன்னோர் நாட்டின்
சுதந்திர அடிமையாய் ஆனதும்
அவன் பிள்ளை
தான் யாரென்றே தெரியாத
இனமொன்றின் வாரிசு ஆவதும்

இந்தச்
(சு)தந்திர நாட்டின்
மக்களாய் பிறந்ததால்தானாம்

சுதந்திரம்
கேட்கவே காதினிக்கிறது.

சுதந்திரம்
சொல்லச் சொல்ல
நா இனிக்கிறது

#ஈழத்துப்பித்தன்
04.02.2016


1 comment:

நிஷா said...

என் பிள்ளை
இன்னோர் நாட்டின்
சுதந்திர அடிமையாய் ஆனதும்
அவன் பிள்ளை
தான் யாரென்றே தெரியாத
இனமொன்றின் வாரிசு ஆவதும்////

பொருளாதாரம் மட்டும் சுதந்திரம் அல்ல என புரிகின்றது தானே? அருமை வரிகள்! தொடருங்கள்!

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.