Pages

February 18, 2016

போர் கண்ட வம்சமெடி!!!

போர் கண்ட வம்சமெடி!!!
○●○●○●○●○●○●○●○●○●○

நிலமிடை தமிழ் வீரம்
நாட்டிப் பெண்டிர் நின்று
நீண்ட எல்லைகளின் சாமிகளாய்
நிலம் காத்த மண்ணிலிருந்து
நித்தம் வரும் சேதி கேட்க
நீறு பூத்த நெருப்புபோல்
நெஞ்சம் எல்லாம் கனல்கிறது

அங்கையற் கண்ணிகளாய்
அகிலம் முழுதும் அறிய
ஆயுதம் ஏந்தி நின்று
அசர வைத்த எம் குலப்பெண்கள்
அடி ஒற்றி வந்த பிஞ்சுகள்
அநீதியாய் அற்ப சுகத்துக்காய்
அரக்கர்கள் கரங்களில் மாள்வதோ?

பொறுத்தார் பூமி ஆழ்வாராம்
பொங்கினால் பயனேதும் இல்லையாம்
போங்கடா போங்கடா உங்கள்
பொறுப்பற்ற பதில்களைக் கொண்டு
பொங்கி எழும் தருணம் இது
பெண்டிரே குழல் கொண்டு
போர் கண்ட வம்சமெடி நீங்கள்

போகம் நீ என்று வன் புணர வரும்
பேயர் தனை துவம்சம் செய்ய
போர்க் கலை யாவும் கற்று
பெரும் புயலாக நின்றிறெடி
பேதை அல்ல ஈழம் தந்த
பெண்ணவள் என்றுணர்ந்து
பெருமையோடு வாழ்ந்திடெடி.

#ஈழத்துப்பித்தன்
18.02.2016

2 comments:

நிஷா said...

கராத்தேயும்,குங்ங்பூவும் போதுமா மயூரன்,வர்மக்கலையும், மல்யுத்தமும் கூட கற்றுக்கொள்ள வேண்டுமோ?

எழுத்தில் தொனிக்கும் உணர்வுக்கு வாழ்த்துகள்!இன்னும் இன்னும் அரக்கர்கள் அதிகரித்து தானே செல்கின்றார்கள்,

மிகவும் நன்றுப்பா!தொடருங்கள்!

Inuvaijurmayuran said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி அக்கா. ஈழத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பற்றி கேட்க மனம் கொதிக்கிறது.

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.